ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம் : ஒரே போட்டிக்கு 2.2 கோடி பார்வையாளர்களை பெற்ற ஜியோ சினிமா
ஐபிஎல் 2023 புதன்கிழமை (ஏப்ரல் 12) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்டதால், ஜியோ சினிமா உச்சகட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 176 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் இடையில் விக்கெட்டுகளை இழந்தாலும், தோனி மற்றும் ஜடேஜா கடைசி ஓவர் வரை போராடினர். இருவரின் ஆட்டத்தால் போட்டி பரபரப்பாக இருந்ததால், ஜியோ சினிமாவில் மிக அதிகபட்சமாக 2.2 கோடி பார்வையாளர்கள் போட்டியை பார்த்தனர். இதற்கடுத்து ஜியோ சினிமாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டிகளாக 1.8 பார்வைகளுடன் ஆர்சிபி மற்றும் எல்எஸ்ஜி ஆடிய போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.