Page Loader
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 பெயர்கள் தேர்வு: ஜெய் ஷா 

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 பெயர்கள் தேர்வு: ஜெய் ஷா 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2024
06:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு 2 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார். தேர்வானவர், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது புதிய பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். வெற்றிகரமான டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஜூன் 13 முதல் பணிக்கான விண்ணப்பங்களை எடுக்கும் செயல்முறையை பிசிசிஐ தொடங்கியது. ஐபிஎல் 2024 இல் KKR உடன் வழிகாட்டியாக வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, டிராவிட்டிற்குப் பிறகு புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வாவர் என யூகிக்கப்படுகிறது. ஜூன் 18ஆம் தேதி பயிற்சியாளர் பதிவுக்காக கம்பீர் உடன் நேர்காணல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது புதிய பயிற்சியாளர்