ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி
இந்திய கிரிக்கெட் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 2023 ஆம் ஆண்டுக்கான தனது அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. முந்தைய ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், பாகிஸ்தான் அணி தனது முந்தைய போட்டியில், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பல வரலாற்றுச் சாதனைகளை படைத்தது. இரு அணிகளுமே வலுவாக உள்ள நிலையில், வேகப்பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா மாற்று ஷாஹீன் அப்ரிடியை ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர். ஆனால், முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர், இந்த இருவர் குறித்த அனைத்து ஒப்பீடுகளையும் நிராகரித்துள்ளார்.
பும்ரா உலகின் ஆபத்தான பந்துவீச்சாளர் : கவுதம் காம்பிர் புகழாரம்
பும்ராவை உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என்று புகழ்ந்த கவுதம் காம்பிர், அவருக்கும் ஷாஹீனுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த ஒரு உரையாடலில் பேசிய அவர், "பும்ரா, மிட்செல் மார்ஷை, இப்ராஹிம் சத்ரானை ஆட்டமிழக்கச் செய்த விதத்தை பார்க்கையில், உலக கிரிக்கெட்டில் ஒரு முழுமையான மற்றும் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான்". "நாங்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷாஹீனை ஒப்பிட்டுப் பார்த்தோம். ஆனால் ப்ரிடி முன்பு ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது". "வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் புதிய பந்தில் அல்லது டெத் ஓவர்களின்போது நன்றாகப் பந்து வீசுவார்கள். ஆனால் பும்ரா மட்டுமே நடுத்தர ஓவரிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்." என்றார்.