IPL புள்ளி பட்டியல்: இனி RCB-CSK இடையே தான் போட்டி
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற லக்னோ- டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.
டெல்லி அணி 14 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தது.
லீக் சுற்றில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிகர ரன் ரேட் -0.377 ஆகும்.
ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அந்த அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அவர்கள் புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
அடுத்த இடத்திற்கு போட்டி
மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கு போட்டி
முதல் இரண்டு இடங்கள் அனேகமாக உறுதியான நிலையில், தற்போது அடுத்த இரண்டு இடங்களுக்கான போட்டி நடைபெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
புள்ளிகளின் அடிப்படையில் சென்னையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சமமாகவே உள்ளது.
இருப்பினும், சன்ரைசர்ஸை விட சிறந்த நிகர ரன் ரேட் காரணமாக சிஎஸ்கே லீக் அட்டவணையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
தற்போது சிஎஸ்கே அணியின் நிகர ரன்-ரேட் +0.528.
எனினும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள RCB க்கு எதிரான போட்டியில் CSK வென்றால் மட்டுமே, பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைவது உறுதியாகும்.
அதனால், அப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.