LOADING...
பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான்- KKR விவகாரம்: ரஹ்மானை நீக்கினால் KKR ஊதியம் வழங்க வேண்டுமா?
KKR உரிமையாளர் ஷாருக்கானை 'துரோகி' என்று முத்திரை குத்தியுள்ளனர்

பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான்- KKR விவகாரம்: ரஹ்மானை நீக்கினால் KKR ஊதியம் வழங்க வேண்டுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 02, 2026
02:52 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை, KKR அணி ஏலம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. வவங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகள் தொடர்பான செய்திகள் வெளியானதிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு எதிரான உணர்வு கிளம்பியுள்ளது. சிலர் அண்டை நாட்டில் இந்தியர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் நேரத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு வீரரை சேர்ப்பது உணர்ச்சியற்றது என்று வாதிடுகின்றனர். பாஜக தலைவர் சங்கீத் சோம் உட்பட இந்திய அரசியல் பிரமுகர்கள், KKR உரிமையாளர் ஷாருக்கானை 'துரோகி' என்று முத்திரை குத்தியுள்ளனர். மேலும் ஐபிஎல்லில் அனைத்து வங்கதேச வீரர்களையும் தடை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

நிலைப்பாடு

நிர்வாகத்தின் நிலைப்பாடு

ஆனால், KKR நிர்வாகம் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தப் புகார்களை நிராகரிக்கின்றனர். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்றும், ஒரு வீரரின் திறமையைப் பார்த்தே (Skills) அவர் ஏலம் எடுக்கப்படுகிறார் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக முஸ்தபிசுர் மிகச் சிறப்பாக விளையாடியதைச் சுட்டிக்காட்டும் ஆதரவாளர்கள், அவர் ஒரு சிறந்த 'டெத் ஓவர்' பந்துவீச்சாளர் என்பதால் KKR-க்கு அவர் அவசியமானவர் என்று கூறுகின்றனர்.

ஊதிய விதிமுறை

IPL ஊதிய விதிமுறைகள் என்ன?

ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை வாங்கிய பிறகு, அவர்களை அணியிலிருந்து நீக்கினால் ஊதியம் வழங்கப்படுமா என்பது குறித்த பிசிசிஐ-யின் விதிகள் தற்போது முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஐபிஎல் ஒப்பந்தங்களின்படி, "விளையாடாவிட்டால் ஊதியம் இல்லை" என்ற அடிப்படை விதி பின்பற்றப்படுகிறது: ஒரு வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, காயம் காரணமாகவோ அல்லது சொந்தக் காரணங்களுக்காகவோ ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தொடரிலிருந்து விலகினால், அவருக்கு ஊதியம் வழங்கப்படாது. எனவே, முஸ்தபிசுர் ரஹ்மான் அவராகவே முன்வந்து தொடரிலிருந்து விலகினால், KKR நிர்வாகம் அவருக்கு ரூ. 2 கோடி(அடிப்படை விலை) வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.

Advertisement

நீக்கம்

KKR நீக்கினால் என்ன நடக்கும்?

ஒருவேளை ரசிகர்கள் அல்லது அரசியல் எதிர்ப்புகள் காரணமாக KKR நிர்வாகம் அவரை அணியிலிருந்து நீக்க முடிவு செய்தால், நிலைமை சிக்கலாகும். ஒரு வீரர் காயமின்றி விளையாடத் தயாராக இருக்கும்போது, அவரை அணியில் சேர்த்தும் விளையாட வைக்கவில்லை என்றாலும், ஒப்பந்தப்படி அவருக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும். இத்தகைய சூழல்களில் நிதி இழப்பைத் தவிர்க்க, வீரருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே 'பரஸ்பர உடன்பாடு' (Mutual Agreement) எட்டப்பட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம். அதே நேரத்தில், முஸ்தபிசுர் ரஹ்மான் எந்த விதிமீறலிலும் ஈடுபடாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக அவரைத் தடை செய்ய ஐபிஎல் விதிகளில் இடமில்லை. எனவே, KKR அவரை தன்னிச்சையாக நீக்கினால் அவருக்குச் சேர வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டியிருக்கும்.

Advertisement