LOADING...
ஐபிஎல் 2026: லுங்கி இங்கிடியின் தற்போதைய உடல்நிலை என்ன? டெல்லி கேபிட்டல்ஸ் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
லுங்கி இங்கிடியின் தற்போதைய உடல்நிலை குறித்த அப்டேட்

ஐபிஎல் 2026: லுங்கி இங்கிடியின் தற்போதைய உடல்நிலை என்ன? டெல்லி கேபிட்டல்ஸ் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

எழுதியவர் Vasuki
Apr 25, 2026
08:43 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய விறுவிறுப்பான போட்டியின் போது, கேட்ச் பிடிக்க முயன்று தலையில் பலத்த காயமடைந்த டெல்லி கேபிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இங்கிடியின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் மிகுந்த கவலையில் இருந்த நிலையில், இந்தச் செய்தி பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

நிர்வாகத்தின் அறிக்கை

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லுங்கி இங்கிடிக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. "இங்கிடியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சுயநினைவுடன் உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து அவர் இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாளை காலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல் விதிகளின்படி 'கன்கஷன்' (Concussion) நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவர் அடுத்த சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ கண்காணிப்பு

உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்

இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 264 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்திருந்தது. கேப்டன் கே.எல். ராகுல் 152 ரன்கள் விளாசி அசத்தினார். 265 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நடுவே இங்கிடிக்கு ஏற்பட்ட இந்தகாயம் மைதானத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. அவர் மீண்டும் எப்போது மைதானத்திற்குத் திரும்புவார் என்பது குறித்து மருத்துவக் குழுவினர் விரைவில் முடிவெடுப்பார்கள். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவர், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக வந்த செய்தி, டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Advertisement