IPL 2026: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்- Highlights
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் வாழ்வா சாவா போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பிளே-ஆஃப் கனவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ நிர்ணயித்த 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ராஜஸ்தான் அணி இளம் வீரர்களின் அதிரடியால் மிக எளிதாக எட்டிப்பிடித்தது. ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி, லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 38 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். குறிப்பாக, அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவின் ஒரே ஓவரில் 29 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
லக்னோ
சொதப்பிய ரிஷப் பண்ட்; லக்னோ தோல்வி
மறுபுறம், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் (35 ரன்கள்) மீண்டும் ஒருமுறை ரன் குவிக்கத் தடுமாறினார். மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் குவித்து பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தபோதிலும், பண்ட் மற்றும் லக்னோ பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு அதிகாரப்பூர்வமாகத் தகர்ந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், தனது அடுத்த கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். துருவ் ஜூரெல் (53*) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.