ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 'டக் அவுட்' ஆகி மேக்ஸ்வெல்லுடன் சமன் செய்தார் ரோஹித் சர்மா!
செய்தி முன்னோட்டம்
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் இன்றைய 69-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றி 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை அவர் அதிகாரப்பூர்வமாகச் சமன் செய்துள்ளார். வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்
வரலாற்றுப் பட்டியலில் முதலிடம்
இன்றைய போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம், ரோஹித் சர்மா தனது ஐபிஎல் வாழ்க்கையில் 19-ஆவது முறையாக ரன் ஏதுமின்றி விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல்லின் (19 முறை டக் அவுட்) சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். கிளென் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா - 19 முறை தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் - 18 முறை பியூஷ் சாவ்லா, ரஷீத் கான் - 16 முறை
மும்பை அணிக்குத் தொடரும் ஏமாற்றம்
ரசிகர்கள் அதிர்ச்சி
மும்பை அணிக்குத் தொடரும் ஏமாற்றம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கனவே நடப்புத் தொடரின் பிளேஆஃப் வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மா தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் தவித்து வருவதுடன், இத்தகைய மோசமான சாதனைகளைப் பட்டியலில் இணைத்து வருவது மும்பை ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளில் அவர் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்குத் திரும்புவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்த லீக் தொடர் முழுவதும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கத் தவறிய ரோஹித் சர்மா, இன்றைய மிக முக்கியமான போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தது ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.