LOADING...
தொடர்ந்து IPL ஃபைனல் போட்டிக்கு அகமதாபாத் தேர்வு செய்யப்படுவது எதற்காக?
தொடர்ந்து IPL ஃபைனல் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் அகமதாபாத்

தொடர்ந்து IPL ஃபைனல் போட்டிக்கு அகமதாபாத் தேர்வு செய்யப்படுவது எதற்காக?

எழுதியவர் Venkatalakshmi V
May 11, 2026
05:03 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி மீண்டும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்குக் கிடைக்க வேண்டிய உள்ளூர் மைதான சாதகத்தை பிசிசிஐ தட்டிப்பறித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நான்காவது முறையாக அகமதாபாத் இறுதிப்போட்டியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது ஏன் என தெரிந்துகொள்வோம்.

புறக்கணிப்பு

பெங்களூரு மைதானம் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

வழக்கமாக நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில்தான் அடுத்த ஆண்டின் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாததற்கு கர்நாடக அரசியல்தலையீடே காரணம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். அம்மாநில அரசியல் பிரமுகர்கள் சுமார் 10,000 இலவச டிக்கெட்டுகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும், இது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பலம்

அகமதாபாத் மைதானத்தின் பலம்

மற்ற மைதானங்களைக் காட்டிலும் அகமதாபாத் மைதானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொள்ளும் திறன் கொண்டது. ஸ்பான்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கிய பிறகும், பொதுமக்களுக்கு அதிகப்படியான டிக்கெட்டுகளை விற்க முடியும் என்பதே பிசிசிஐ-ன் கணக்காக உள்ளது. மேலும், ஒளிபரப்பு ரீதியாக அகமதாபாத் மைதானம் காட்சியளிக்கும் விதம் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், அது ஒரு மெகா நிகழ்வுக்கான உணர்வைத் தருவதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பாரபட்சம்

ரசிகர்களின் குமுறலும் பாரபட்சமும்

ஈடன் கார்டன்ஸ், வான்கடே மற்றும் சேப்பாக்கம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானங்களுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு வழங்கப்படாதது கிரிக்கெட் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஈடன் கார்டன்ஸில் மழை பெய்யும் எனக் கூறி இறுதிப்போட்டி மாற்றப்பட்டது, ஆனால் அன்று ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இத்தகைய இரட்டை நிலைப் போக்குகளை பிசிசிஐ தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபிஎல் தொடர் என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, அது அந்தந்த நகரங்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்தது. அனைத்து முக்கியப் போட்டிகளையும் ஒரே இடத்திற்குத் தள்ளுவது ஐபிஎல்-ன் பிராந்தியத் தன்மையைக் குலைக்கும் எனப் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Advertisement