LOADING...
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு

சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
May 11, 2026
09:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தொடரில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவியேற்க உள்ளனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைய இருப்பதால், தலைமைச் செயலக வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் உற்சாகமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு

எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தல்

இன்று கூடும் பேரவைக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டுள்ள கருப்பையா அவர்கள், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்ட பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சபையின் மற்ற மரபு சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சிங்கப் பெண்

"சிங்கப் பெண்" சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம்

புதிய அரசு பதவியேற்ற உடனேயே, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் "சிங்கப் பெண்" என்ற சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஐஜி (IG) தலைமையின் கீழ் இயங்கும் இந்தப் படையில் முதற்கட்டமாக மூன்று உயர் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, நெரிசல் மிகுந்த பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுப்பது மற்றும் புகார்கள் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுப்பது ஆகியவை இந்தப் படையின் முக்கியப் பணிகளாக இருக்கும்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement