LOADING...
ஆர்சிபியை வீழ்த்துமா குஜராத்? ஏஐ சாட்பாட்டுகளின் அதிரடி கணிப்பு!
விராட் கோலி Vs குஜராத் டைட்டன்ஸ்

ஆர்சிபியை வீழ்த்துமா குஜராத்? ஏஐ சாட்பாட்டுகளின் அதிரடி கணிப்பு!

எழுதியவர் Vasuki
May 30, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதும் இந்த ஆட்டம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்ட ஆர்சிபி அணிக்கும், பலமான பந்துவீச்சைக் கொண்ட குஜராத் அணிக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்பது குறித்து சாட்ஜிபிடி (ChatGPT), ஜெமினி (Gemini) மற்றும் க்ரோக் (Grok) ஆகிய முன்னணி ஏஐ (AI) தொழில்நுட்பங்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

ஏஐ சாட்பாட்டுகளின் சுவாரசியமான கணிப்புகள்:

சாட்ஜிபிடி (ChatGPT) கணிப்பு: 

ப்ளேஆஃப் சுற்றில் ஏற்கனவே ஆர்சிபி அணி குஜராத்தை வீழ்த்தியுள்ளதால், பெங்களூரு அணிக்கு உளவியல் ரீதியாகச் சிறு சாதகம் உள்ளதாகச் சாட்ஜிபிடி கூறுகிறது. விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஆகியோரின் ஃபார்ம் ஆர்சிபிக்கு பலம் சேர்க்கிறது. அதே நேரத்தில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் மற்றும் ரஷித் கான் ஆகியோரைக் கொண்ட குஜராத் அணியும் இறுதிப்போட்டி போன்ற அழுத்தமான சூழலைச் சமாளிப்பதில் வல்லவர்கள். இருப்பினும், ஆர்சிபி வெற்றி பெற 55-60% வாய்ப்புகளும், குஜராத் வெற்றி பெற 40-45% வாய்ப்புகளும் இருப்பதாகச் சாட்ஜிபிடி கணித்துள்ளது.

ஜெமினி (Gemini) கணிப்பு:

ஆர்சிபிக்கு அதிக வாய்ப்பு

குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் ஆர்சிபி பலமாக இருப்பதாக ஜெமினி கூறுகிறது. குறிப்பாக, ஆர்சிபி அணியின் புவனேஸ்வர் குமார், குஜராத் அணியின் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லரை 9 முறையும், ஷுப்மன் கில்லை 5 முறையும் டி20 போட்டிகளில் அவுட் செய்துள்ளார். இந்தத் தொடக்க ஓவர்களைக் குஜராத் சமாளித்துவிட்டால் ஆட்டம் மாறலாம். மேலும், நடு ஓவர்களில் ரஜத் படிதாருக்கு எதிராக ரஷித் கான் வீசும் பந்துவீச்சு திருப்புமுனையாக அமையும். இறுதித் தீர்ப்பாக, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ஆர்சிபிக்கே அதிக வாய்ப்புள்ளதாக ஜெமினி தெரிவித்துள்ளது.

Advertisement

க்ரோக் (Grok) கணிப்பு:

குஜராத் அதிர்ச்சி

ஆர்சிபி அணி ஃபேவரிட்டாகக் களம் இறங்கினாலும், அகமதாபாத் மைதானம் குஜராத் அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் அவர்களுக்குப் பெரிய ஆதரவு இருக்கும் என க்ரோக் கணித்துள்ளது. ஷுப்மன் கில்லின் ஃபார்ம் மற்றும் பனிப்பொழிவு (Dew factor) டாஸ் வெல்லும் அணிக்குச் சாதகமாக அமையும். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஒரு நல்ல பேட்டிங் நாள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என்பதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்சிபிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக க்ரோக் பந்தயம் கட்டியுள்ளது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டாஸ் மற்றும் பனிப்பொழிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், நிலைமைகளைச் சரியாகப் பயன்படுத்தும் குஜராத் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது" என குஜராத் அணிக்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

Advertisement

சொந்த மைதானம்

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அகமதாபாத் மைதானம் குஜராத்தின் சொந்த மைதானம் என்பதால், அங்குள்ள உள்ளூர் ரசிகர்களின் பேராதரவும், சுப்மன் கில்லின் ஃபார்மும் அவர்களுக்குக் கூடுதல் பலம். ஏஐ கணிப்புகளின்படி ஆர்சிபி பேட்டிங்கிலும், குஜராத் பந்துவீச்சிலும் மிரட்டலாக இருப்பதால் நாளை அகமதாபாத்தில் சிக்ஸர் மழையும், விக்கெட் வேட்டையும் சரிசமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி தக்கவைக்குமா அல்லது குஜராத் மீண்டும் மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத் தளங்களின் இந்த மாறுபட்ட கணிப்புகள், நாளை நடைபெறவிருக்கும் பைனல் மீதான எதிர்பார்ப்பைக் கிரிக்கெட் ரசிகர்களிடையே மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement