NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?
    எம்எஸ் தோனி

    பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    11:01 am

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் 2025 ஐபிஎல் ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை 'அன்கேப்ட் பிளேயர்' என்று வகைப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருகிறது.

    இந்த முடிவு முந்தைய ஐபிஎல் விதிமுறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். இந்த நடவடிக்கையானது ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியுடன் இணைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு பெரிதும் பயனளிக்கும்.

    பிசிசிஐயின் இந்த விதியானது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற வீரர்களை, அன்கேப்ட் பிரிவில் சேர்த்தது.

    இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டால், முந்தைய தக்கவைப்பு விதிகளின்படி தோனியைத் தக்கவைத்துக்கொள்வது சிஎஸ்கேவுக்கு மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும். ஒரு அன்கேப்ட் வீரரை ₹4 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிஎஸ்கே பதில்

    தோனியின் வகைப்படுத்தலில் சிஎஸ்கேயின் நிலைப்பாடு

    2025 ஐபிஎல் ஏலத்தில் எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராகக் கருதப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்றும், அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் கோரவில்லை என்றும் கூறினார்.

    மேலும், அன்கேப்ட் பிளேயர் விதியை தக்கவைப்பது குறித்து பிசிசிஐ தங்களுக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய தோனி, ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஐபிஎல்லில் தனது எதிர்காலம் வரவிருக்கும் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளைப் பொறுத்தது என்று அவர் சமீபத்தில் மறைமுகமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    ஐபிஎல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    எம்எஸ் தோனி

    'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல் இந்திய கிரிக்கெட் அணி
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி பைக்
    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி கிரிக்கெட்

    ஐபிஎல்

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    DC vs CSK: MSD ஹெலிகாப்டர் ஷாட் அடித்தும், CSK அதிர்ச்சி தோல்வி ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024: தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல் 2024

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா டி20 உலகக்கோப்பை
    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் ரிஷப் பண்ட்
    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி டி20 உலகக்கோப்பை
    டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள் டி20 கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ பிசிசிஐ
    இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை பிசிசிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025