
SRH vs GT: 3ஆவது அணியாக பிளே ஆஃப் சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
செய்தி முன்னோட்டம்
நேற்று ஹைதராபாத்தில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக, நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அதன்படி, SRH, 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறி, 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே, முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2ஆவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணி இணைந்துள்ளது.
தற்போது 4வது அணியாக சிஎஸ்கே அல்லது பெங்களூரு அணி நுழையும்.
embed
Twitter Post
#IPLUpdate | PlayOff சுற்றுக்கு செல்ல RCB மற்றும் CSK அணிகளுக்கு இடையே போட்டி#SunNews | #TATAIPL | #RCBVsCSK | #Bangalore pic.twitter.com/gH9zmsCFO0— Sun News (@sunnewstamil) May 17, 2024