
CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல்
செய்தி முன்னோட்டம்
இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள 17வது ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. எனினும், விற்பனை தொடங்கி 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்ததால், ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதோடு டிக்கெட் விற்பனை செய்த பேடிஎம் இன்சைட்ர் இணையதளமும் முடங்கியதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டிக்கு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
எனினும் உலகக்கோப்பை தொடர் போட்டியில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக கூறப்பட்டது போல, தற்போது ஐபிஎல் போட்டிக்கும் டிக்கெட்டுகள் விற்றதாக அறிவிக்கப்பட்டதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் டிக்கெட்டுகள்
#JUSTIN | சென்னை-ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் தளம் முடங்கியது#IPL | #IPL2024 | #CSKvRCB | #IPLTicket pic.twitter.com/1N2YCbJMcL
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 18, 2024