ஆள் மாறிப்போச்சு; ஐபிஎல் ஏலத்தில் தவறாக வேறு ஒரு வீரரை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தவறான வீரரை வாங்கியதால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. எனினும், தவறை உணர்ந்தவுடன், அணியின் உரிமையாளர், ஏலதாரர் மல்லிகா சாகரிடம் இதுகுறித்து தெரிவித்தார். ஆனால் ஏலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால் எதுவும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த குழப்பத்தில் சிக்கியது இந்திய வீரர் ஷஷாங்க் சிங். ஏலத்தின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்கள் நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவர்களது குழுவினர் சத்தீஸ்கர் வீரர் ஷஷாங்க் சிங்கை வேறு ஒருவராக தவறாகக் கருதியதால் அவரை வாங்கிவிட்டனர். பின்னர் தவறை உணர்ந்து முறையிட்டால், அது எந்த பலனையும் கொடுக்காததால், விருப்பமில்லாமல் ஒரு வீரரை அணியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.