சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்
ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இரு தரப்பினரும் தங்கள் இந்த சீசனில் தங்கம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து அடுத்த இரண்டில் வெற்றி பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி தலா 9 வெற்றிகளை பெற்றுள்ளனர். ஹைதராபாத் மைதானத்தை பொறுத்தவரை இங்கு விளையாடிய 66 ஐபிஎல் போட்டிகளில் 37 ஆட்டங்களில் சேஸிங் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எஸ்ஆர்எச் இந்த இடத்தில் 46 ஆட்டங்களில் 31 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள முக்கிய மைல்ஸ்டோன்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் 6,000 ரன்களை எடுத்த நான்காவது வீரர் என்ற சாதனை படைப்பார். இதற்கு முன்னர் விராட் கோலி (6,838), ஷிகர் தவான் (6,477) மற்றும் டேவிட் வார்னர் (6,109) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். ராகுல் திரிபாதி தற்போது 80 ஐபிஎல் போட்டிகளில் 11 அரைசதங்களுடன் 1,915 ரன்கள் குவித்துள்ள நிலையில், இன்னும் 85 ரன்கள் எடுத்தால் 2,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார். சூர்யகுமார் யாதவ் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களை எட்ட இன்னும் 43 ரன்கள் மட்டுமே உள்ளது.