
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விதிமீறல் : அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 12) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தை விதிகளின் பிரிவு 2.7 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை அஸ்வின் ஒப்புக்கொண்டார்.
ஐபிஎல் நடத்தை விதியின் பிரிவு 2.7 இன் படி, ஒரு போட்டியில் நிகழும் ஒரு சம்பவம் தொடர்பாக பொது விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பது குற்றமாகும்.
reason behind fine for ashwin
அஸ்வினுக்கு அபராதம் விதிக்க காரணம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பனி காரணமாக ஆட்டத்தின் நடுவே பந்தை மாற்ற ஆன்-பீல்ட் அம்பயர்கள் முடிவு எடுத்தது குறித்து அஸ்வின் விமர்சித்து இருந்தார்.
தங்கள் அணி புதிய பந்தைக் கேட்கவில்லை என்றும் அது நடுவரின் முடிவு என்று கூறிய அவர், அதைப் பற்றி கேட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையே மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.