
ஐபிஎல் 2023 : ஏப்ரல் 5 நிலவரப்படி புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 5) நிலவரப்படி புள்ளிப்பட்டியலில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
2022 தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் தொடரிலேயே பதக்கம் வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்கிய நிலையில், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதற்கிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டிகளில் கூட வெல்லாமல், 4 இடங்களில் பின்தங்கி உள்ளன.
ஐபிஎல் 2023
ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப்களை தக்கவைத்துள்ள வீரர்கள்
தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு கேப்பும், அதிக விக்கெட் எடுக்கும் வீரருக்கு பர்ப்பிள் கேப்பும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து, மொத்தம் 149 ரன்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் கேப்பை தக்கவைத்துள்ளார்.
இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை (ஏப்ரல் 5) இரவு 7.30 மணிக்கு குவஹாத்தியில் மோத உள்ளன.