
ஐபிஎல் 2023 : பிளேஆப் வாய்ப்பை கைப்பற்றும் அணிகள் எவை! தற்போதைய நிலவரம் இது தான்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் மொத்தமுள்ள 70 லீக் போட்டிகளில் 65 போட்டிகள் முடிந்த பிறகும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் இன்னும் உறுதியாகவில்லை.
அனைத்து 10 அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பிளேஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்து வெளியேறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 15 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை பெற்றுவிட்டால் பிளேஆப்பை உறுதி செய்துவிடும்.
other possibilities of playoff
பிளேஆப் வாய்ப்புக்காக கடுமையாக போட்டியிடும் அணிகள்
வாய்ப்பு 1: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி பெறாத நிலையில், தலா 14புள்ளிகளுடன் உள்ள ஆர்சிபி, எம்ஐ பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.
இத்தகைய சூழலில் நிகர ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அல்லது எல்எஸ்ஜி வாய்ப்பை பெறும். சிஎஸ்கே அல்லது எல்எஸ்ஜி ஆகிய இரண்டில் ஒரு அணி வெற்றி பெற்றால் மற்றொரு அணி பிளேஆப் வாய்ப்பை இழந்துவிடும்.
வாய்ப்பு 2: ஆர்சிபி, எம்ஐ வெற்றி பெறாத நிலையில் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகள் வாய்ப்பை உறுதி செய்யும்.
மறுபுறம் ஆர்ஆர், கேகேஆர் மற்றும் பிபிகேஎஸ் பெறும் வெற்றி தோல்விகளின் அடிப்படையில், இந்த ஐந்து அணிகளில் ஒரு அணி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.