கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி?
செய்தி முன்னோட்டம்
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 9வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) உடன் மோதுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், ஆர்சிபி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியுள்ளது. மறுபுறம் கேகேஆர் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் இதுவரை 74 போட்டிகளில் விளையாடி 45 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் எந்தவொரு அணியும் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
கேகேஆர் அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத நிலையில், அணியின் முக்கிய வீரர்கள் பலர் வெளியேறியுள்ளது அணிக்கு பின்னடைவாக இருப்பதால், ஆர்சிபியின் ஆதிக்கம் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலில் பின்வருமாறு:-
கேகேஆர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நாராயண் ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ஆர்சிபி : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.