PBKS vs RCB : டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதத்தால் 174 ரன்கள் குவித்த ஆர்சிபி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 27வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு (பிபிகேஎஸ்) எதிராக முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
மொஹாலியின் பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் 3 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆர்சிபி சீரான தொடக்கத்தில் இருந்தது.
ஃபாஃப் மற்றும் ஸ்டாண்ட்-இன் கேப்டன் கோலி பின்னர் ஸ்கோரை அதிகரித்த ஆறு ஓவர்கள் முடிவில் சேலஞ்சர்ஸ் அணி 59/0 என்ற நிலையில் இருந்தது.
Kohli du plessis half century
டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதம்
ஏழு முதல் 15 வரையிலான ஓவர்களில் ஆர்சிபி எந்த விக்கெட்டையும் இழக்கவில்லை என்றாலும், ஸ்கோர் விகிதம் கணிசமாகக் குறைந்தது.
இதில் 71 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், விராட் கோலி தனது 48வது அரைசதத்தை பதிவு செய்து 59 ரன்கள் எடுத்தார்.
இதே போல் இம்பாக்ட் பிளேயராக வந்த டு பிளெஸ்ஸிஸ் 84 ரன்கள் எடுத்தார். இது டு பிளெஸ்ஸிஸிற்கு நடப்பு ஐபிஎல்லில் நான்காவது அரைசதமாகும்.
மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் 343 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
இதற்கிடையே டெத் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறிய ஆர்சிபி 20 இவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.