லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்
ஐபிஎல் 2023 சீசனின் 21வது போட்டியில் சனிக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) எதிர்கொள்ள உள்ளது. பிபிகேஎஸ் இரண்டு வெற்றிகளுடன் இந்த சீசனைத் தொடங்கினாலும், கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பின்தங்கியுள்ளது. அதேசமயம் எல்எஸ்ஜி அவர்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று மிகவும் வலுவாக உள்ளது. எல்எஸ்ஜி கடந்த சீசனில் தான் ஐபிஎல்லில் அறிமுகமாகியதால் பிபிகேஎஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. கடந்த சீசனில் நடந்த அந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள முக்கிய மைல்ஸ்டோன்கள்
4,000 ஐபிஎல் ரன்களை முடிக்க கே.எல்.ராகுலுக்கு இன்னும் 30 ரன்கள் தேவை. இந்த சீசனில் அவர் போராடி வந்தாலும், விரைவில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அமித் மிஸ்ரா (169), லசித் மலிங்காவை (170) விஞ்சவும், ஐபிஎல் விக்கெட்டுகள் எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழையவும் இன்னும் இரண்டு விக்கெட்டுகள் தேவை. மிஸ்ரா பிபிகேஎஸ் அணிக்கு எதிரான 20 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 50 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் ஆவார்.