
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் : காரணம் இது தான்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 46வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
போட்டி லக்னோ ஏகனா மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், லக்னோ மாநகராட்சித் தேர்தல் காரணமாக தேதி மாற்றப்பட்டுள்ளது.
மே 4 ஆம் தேதி போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக மே 3 ஆம் தேதி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 3 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் என தெரிவித்துள்ளது.
IPL match reschedule list for elections
தேர்தல்களால் ஐபிஎல் போட்டி அட்டவணை மாற்றப்பட்ட நிகழ்வுகள்
தேர்தல் நடப்பதால் ஐபிஎல் அட்டவணை மாற்றப்படுவது இது முதல் நிகழ்வு அல்ல.
முதல்முறையாக 2009 இல், இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல்கள் காரணமாக ஐபிஎல் போட்டிகள் முழுவதும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.
பின்னர் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்த பிறகுதான் இந்தியாவில் போட்டிகள் நடந்தன.
இதற்கிடையில், தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 10 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதை பாதிக்காதவாறு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.