"எப்புட்றா" : வெங்கடேஷ் ஐயர் சதமடித்ததை துல்லியமாக கணித்த ரசிகர்
ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சதம் அடித்து வரலாறு படைத்தார். ஐபிஎல்லில் கேகேஆர் வீரர் ஒருவர் சதம் அடித்தது 15 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரெண்டன் மெக்கல்லம் கடைசியாக சதமடித்து இருந்தார். இந்நிலையில் கேகேஆர் முதலில் பேட் செய்தால் வெங்கடேஷ் ஐயர் சதமடிப்பார் என்றும், அதை 51 பந்துகளில் செய்வார் என்றும் ஷாஹித் என்ற கிரிக்கெட் ரசிகர் கிட்டத்தட்ட துல்லியமாக கணித்து ட்வீட் வெளியிட்டிருந்தார். வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் சதமடித்தாலும், இறுதியில் அவர் 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் அவரது ட்வீட் வைரலாகி வருகிறது.