
ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே?
செய்தி முன்னோட்டம்
முந்தைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) திங்கட்கிழமை (ஏப்ரல் 3) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
மறுபுறம் எல்எஸ்ஜி அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வலுவுடன் இரண்டாவது போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
போட்டி சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடந்தாலும், அணியின் பந்துவீச்சு மிக பலவீனமாக உள்ளதால் பின்னடைவுடன் போட்டியை எதிர்கொள்கிறது.
மேலும் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய நிலையில், இந்த முறை அதை சரிசெய்து பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
சென்னை சேப்பாக்கத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 30) இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் போட்டியை நேரடியாக பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு :-
சிஎஸ்கே : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
எல்எஸ்ஜி : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.