
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசோசியேட் ஸ்பான்சராக விஷன்11 ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஸ்போர்ட்ஸ் ஃபேன்டஸி கேமிங் தளமான விஷன் 11 உடன் இணைந்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2023 சீசனுக்கு, விஷன்11 சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ அசோசியேட் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விஷன்11 பிராண்டின் லோகோ அணி வீரர்களின் தொப்பி மற்றும் ஹெல்மெட்டில் பொறிக்கப்படும்.
விஷன்11 என்பது ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் விஷன்11 பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பாகும்.
இதில் பயனர்கள் தங்களது விளையாட்டுத் திறனைப் பயன்படுத்திக் களத்தில் உள்ள வீரர்களின் செயல்திறனின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்த வீரர்களுடன் தங்கள் அணியை உருவாக்கலாம் மற்றும் பிற பயனர்களுடன் போட்டியிடலாம்.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே ட்வீட்
The summer of 2023 has a new vision connect 🤝 #WhistlePodu for @Vision11ofc, newest addition to our #SuperFam 🦁 pic.twitter.com/kBOCnlLokk
— Chennai Super Kings (@ChennaiIPL) March 14, 2023