ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எதிர்பார்க்கபப்டும் சிஎஸ்கே பிளேயிங் 11
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும். எம்எஸ் தோனி தலைமையிலான இந்த அணி கடந்த காலத்தில் நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. தோனிக்கு இது கடைசி சீசன் எனக் கூறப்படுவதால் அவரது தலைமையின் கீழ் அவர்கள் இந்த முறை ஐந்தாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. மார்ச் 31ஆம் தேதி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாட உள்ளது. மறுபுறம் 2022 ஐபிஎல்லில் அறிமுக அணியாக ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த முறை அதை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளி விபரங்கள்
2022 சீசனில் தான் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கி இருப்பதால் இதுவரை நேருக்கு நேர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. இதில் இரண்டிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை விளையாடுவதால் மதீச பத்திரனா மற்றும் தீக்ஷனாவை சிஎஸ்கே இழக்கும். இதற்கிடையில், முகேஷ் சவுத்ரி முதுகில் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் பிளெயிங் 11 : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சிசண்டா மகலா, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே.