Page Loader
GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள்
GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள்

GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 04, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி), நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) டெல்லியில் எதிர்கொள்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் தனது சொந்த மைதானமான அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டியை எதிர்கொள்வதால், வெற்றிக் கணக்கை தொடங்கி விடலாம் எனும் நம்பிக்கையுடன் உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 77 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் சேஸிங் செய்யும் அணி அதிகபட்சமாக 42, போட்டிகளிலும்., முதலில் பேட்டிங் செய்யும் அணி 34 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. டிசி அணி இந்த மைதானத்தில் 70 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அருண் ஜெட்லி மைதானம்

அருண் ஜெட்லி மைதானத்தின் அணிகளின் புள்ளி விபரங்கள்

குஜராத் டைட்டன்ஸ் இந்த மைதானத்தில் முதல்முறையாக விளையாட உள்ளது. டிசி முன்னர் டெல்லி டேர்டெவில்ஸாக இருக்கும்போது, 2011 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக எடுத்த 231/4 ரன்களே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. சிஎஸ்கேக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 219 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றதே மிகச் சிறந்த சேசிங் ஆகும். சேவாக் இங்கு 933 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார். அமித் மிஸ்ரா 58 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ளார். தற்போது டிசி அணியின் கேப்டனாக இருக்கும் வார்னர் 2010 இல் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தான் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.