Page Loader
INDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி
டையில் முதல் ஒருநாள் போட்டி

INDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2024
11:59 am

செய்தி முன்னோட்டம்

கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இந்தியா vs இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 67 ரன்களும், பதும் நிசங்கா 56 ரன்களும் எடுத்தனர். 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.

9 முறை டை

டையில் முடிந்த போட்டிகளின் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டியை இலங்கைக்கு எதிராக டையில் முடித்த நிலையில், இந்திய அணி விளையாடிய போட்டி டை ஆவது இது ஒன்பதாவது முறையாகும். இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டை ஆவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, 2012இல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இலங்கைக்கு எதிராக டையில் முடித்திருந்தது. இந்திய அணி இதுவரை இலங்கை, ஜிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா இரண்டு முறையும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருமுறையும் டையில் முடித்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இதுவரை 44 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக விளையாடப்பட்டுள்ள 4,752 போட்டிகளில் வெறும் 0.92 சதவீதம் மட்டுமேயாகும்.