பக்கா பிளானோடு இறங்கணும்; நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி தனது ஐந்தாவது ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்க உள்ளது.
ரோஹித் ஷர்மா மற்றும் டாம் லாதம் தலைமையிலான இந்த இரு அணிகள் மட்டுமே நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இன்னும் தோல்வியை சந்திக்காத அணிகளாக உள்ள நிலையில், வெற்றிப் பயணத்தை தொடர இரு அணிகளும் ஆர்வமாக உள்ளன.
இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, நியூசிலாந்து போன்ற அணியை தோற்கடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
Rohit sharma speaks about New Zealand Match
நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து ரோஹித் ஷர்மா கருத்து
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, "நியூசிலாந்து கிரிக்கெட் அணியை பற்றி பேசும் போது, தந்திரோபாய ரீதியாக மிகவும் வலிமையானவர்கள் என்று நான் உணர்கிறேன்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் பேட்டிங் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது உங்களுக்கு எதிராக ஒருவித திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.
ஐசிசி போட்டிகளில் அவர்கள் எங்களைத் தொடர்ந்து தோற்கடித்துள்ளனர், எனவே தனிப்பட்டவர்களாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை, முதலில் நிலைமையைப் புரிந்துகொண்டு விளையாட்டை விளையாட முயற்சிப்பது எங்களுக்கு முக்கியம்." என்றார்.
2003 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு ஐசிசி போட்டிகள் எதிலும் இந்தியா நியூசிலாந்தை தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.