
INDvsAUS Final Expected Playing XI : அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல இந்தியாவும், ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவும் அதிக முனைப்புடன் உள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களான கேசவ் மஹராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சியுடன் விளையாடும் போது மார்னஸ் லாபுஷாக்னே சிறப்பாக செயல்படவில்லை.
அவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் வசதியாக இருக்க மாட்டார் என்ற கருத்து உள்ளதால், அவரை நீக்கிவிட்டு, இந்திய நிலைமைகளை நன்கு அறிந்துள்ள ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸை அணியில் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
INDvsAUS ODI World Cup Final Expected Playing XI
இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?
அஸ்வின் ரவிச்சந்திரன், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தாமதமாக நுழைந்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டி நடப்பதால், முகமது சிராஜை ஓரம்கட்டி, அஸ்வினை களமிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பின்வருமாறு:-
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்/அஸ்வின் ரவிச்சந்திரன்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.