உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி
உலகின் மிகவும் கடினமான மாரத்தான்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெலிரியஸ் டபிள்யூ.இ.எஸ்.டி.யை இந்தியாவின் சுகந்த் சுகி ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார். 350 கிலோமீட்டர் தூரத்தை 102 மணி 27 நிமிடங்களில் கடந்தார். டெலிரியஸ் டபிள்யூ.இ.எஸ்.டி. பிப்ரவரி 8-12, 2023ல் நடைபெற்றது. இது உலகின் முதல் 10 கடினமான 200 மைல்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுகி தனது யூடியூப்பில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் பாதை மற்றும் ஓடும்போது சந்திக்கும் பல சவால்களை விளக்கியுள்ளார். இந்த மராத்தானை அவர் முடித்த காட்சிகளையும் பகிர்ந்து கொண்டார். பதிவின் தலைப்பில், "அந்த கொடிய காட்டில் 350 கிமீ ஓடியதன் மூலம் வாழ்க்கையில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன்."என பதிவிட்டுள்ளார்.