ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்கம்
தடகள ஆசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளில் வியாழக்கிழமை (ஜூலை 13) இந்திய வீரர்கள் மூன்று தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். மகளிர் 100மீ தடை தாண்டுதல் வீராங்கனை ஜோதி யர்ராஜி மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் தனது முதல் தங்கப் பதக்கத்தை இதில் வென்றுள்ளார். அஜய் குமார் சரோஜ் ஆடவருக்கான 1,500மீ ஓட்டத்தில் முதலிடம் பிடித்த நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர், ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வென்று இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை கைப்பற்றினார். இதற்கிடையே, ஐஸ்வர்யா மிஸ்ரா மகளிர் 400மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். முன்னதாக, புதன்கிழமை வென்ற ஒரு வெண்கலம் உட்பட, மொத்தம் மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை கைப்பற்றுள்ளது.