இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : ரிங்கு சிங் ஆட்டம் வீண்; தோல்வியைத் தழுவியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடியும் இந்தியா தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டக்கவுட் ஆகி வெளியேறினாலும், அதன் பின் வந்த திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், ரிங்கு சிங் அவுட்டாகாமல் 68 ரன்களும் எடுத்த நிலையில், 19.3 ஓவர்கள் முடிந்தபோது போட்டி மழையால் தடைபட்டது.
India lost by 5 wickets
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியா 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்த நிலையில், மழை நின்ற பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்களை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க அட்டாக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களும், ஐடென் மார்க்ரம் 30 ரன்களும் எடுத்தனர்.
மேலும், 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.