Page Loader
INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படைத்த முக்கிய சாதனைகள்
INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படைத்த முக்கிய சாதனைகள்

INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படைத்த முக்கிய சாதனைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2023
12:47 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) இந்திய கிரிக்கெட் அணி நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடிக்க 50 ஓவர்களில் 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 250 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் தேஜா நிடமானுரு அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான சில சாதனைகளை இதில் பார்க்கலாம்.

INDvsNED ODI World Cup List of records created by India

இந்தியா vs நெதர்லாந்து ஆட்டத்தின் சிறந்த சாதனைகள்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்தார். 1996 மற்றும் 2011ல் முறையே கும்ப்ளே மற்றும் யுவராஜ் தலா 15 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், ஜடேஜா தற்போது 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் முதல் ஐந்து பேட்டர்கள் ஒவ்வொருவரும் ஒரே இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 150 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.