இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோத உள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி முடிவடையும் இந்த் தொடரில் மூன்று டி20 போட்டிகளும் ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த தொடரின் டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்தும் முழுவதுமாக மும்பை மற்றும் நவி மும்பையில் நடைபெறும். அதன்படி, டி20 போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்திலும், டெஸ்ட் போட்டி டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியிலும் நடைபெறும். டிசம்பர் 6, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டி20 கிரிக்கெட் போட்டிகளும், டிசம்பர் 14 முதல் 17 வரை டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரங்கள்
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 20 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இந்தியா 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இதுவரை இங்கிலாந்தை வென்றதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 14 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 11 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா மற்றும் ஃபேன்கோட் செயலி மற்றும் இணையதளத்திலும் நேரடியாகப் பார்க்கலாம்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வீராங்கனைகளின் பட்டியல்
டி20 அணி : ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி. டெஸ்ட் அணி : ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், சினே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர்.