India vs England: இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அஸ்வின்
செய்தி முன்னோட்டம்
இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக அஸ்வின் ரவிச்சந்திரன் ஒரே அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் நோ-பாலாக வீசிய நிலையில், அதன்பின்னர் வந்த அஸ்வினின் பந்து வீச்சில் இங்கிலாந்து அணி தடுமாற, அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார்.
இதன் மூலமாக ஒரே அணிக்கு எதிராக அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார்.
embed
மீண்டும் ஒரு சாதனை படைத்த அஸ்வின்
Setting new records yet again, @ashwinravi99 has made history by becoming the first Indian to take 100 test wickets against England. His outstanding performance further cements his status as one of the greatest spin bowlers in cricket history. His extraordinary feat underscores... pic.twitter.com/jETUhpe3Mf— Jay Shah (@JayShah) February 23, 2024