
இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : முகேஷ் குமாருக்கு பதில் தீபக் சாஹர் அணியில் சேர்ப்பு; காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) நடைபெறுகிறது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் முகேஷ் குமார் எஞ்சிய மூன்று டி20 போட்டிகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
முகேஷ் குமாருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் பங்கேற்பதற்காக அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இதையடுத்து தீபக் சாஹர் முகேஷ் குமாருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் ராய்பூரில் நடக்க உள்ள நான்காவது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மூன்றாவது போட்டியின் விளையாடும் லெவனில் முகேஷுக்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
முகேஷ் குமார் அணியிலிருந்து விடுவிப்பு
Update: Fast bowler Mukesh Kumar made a request to BCCI to be released from India’s squad ahead of the third T20I against Australia in Guwahati. Mukesh is getting married and has been granted leave for the duration of his wedding festivities.
— BCCI (@BCCI) November 28, 2023
He will join the squad ahead of the…