Page Loader
INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : 188 ரன்களில் ஆஸ்திரேலியாவை முடக்கிய இந்தியா
முதல் ஒருநாள் போட்டியில் 188 ரன்களில் ஆஸ்திரேலியாவை முடக்கிய இந்தியா

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : 188 ரன்களில் ஆஸ்திரேலியாவை முடக்கிய இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 17, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்த நிலையில், மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது ஷமி மிகக்குறைந்த எகானாமியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முகமது சிராஜும் 3 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

பிசிசிஐ ட்வீட்