2024இல் 6 போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கை செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ஜூலை 2024இல் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்ல உள்ளது. புதன்கிழமை (நவம்பர் 29) இலங்கை கிரிக்கெட் வாரியம் 2024க்கான அணியின் போட்டி அட்டவணையை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி 2024இல் 10 டெஸ்ட் மற்றும் தலா 21 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தம் 52 சர்வதேச ஆட்டங்களில் விளையாடும். டி20 உலகக்கோப்பையின் விளையாடும் கூடுதல் ஆட்டங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இலங்கை அரசின் தலையீடு காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் உள்ளது.