
ஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் தொடங்க உள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் இந்த போட்டி நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தது.
போட்டியை தங்கள் நாட்டிலிருந்து மாற்றினால், புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டினாலும், பின்னர் அந்நாட்டு ஒப்புதலுடன் போட்டி ஹைபிரிட் முறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்தியா ஒரு முறை ஆசிய கோப்பையை புறக்கணித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
1984ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை முதன்முதலாக தொடங்கிய நிலையில், 1986இல் நடந்த இரண்டாவது ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்கவில்லை.
india pulled out of 1986 asia cup
இந்திய போட்டியில் பங்கேற்காததன் பின்னணி
1982இல் இலங்கை கிரிக்கெட் அணி ஐசிசி முழு உறுப்பினர் ஆன பிறகு, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடங்கியது.
1984இல் ஷார்ஜாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இதையடுத்து இரண்டாவது தொடர் 1986இல் இலங்கையில் நடந்தது.
இதற்கு முன்னதாக, 1985இல் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்தபோது, நடுவர்கள் பல தவறான முடிவுகளை இந்தியாவுக்கு எதிரான வழங்கினர்.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது இந்திய அணி கடும் அதிருப்தியில் இருந்தது. மேலும், அப்போது இலங்கை உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்ததால், வீரர்களின் பாதுகாப்பும் ஆராயப்பட்டு, போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்தது.