Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2023
05:53 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மட்டும் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார பந்துவீச்சு மூலம், 129 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதோடு, அரையிறுதி வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வதற்கான விளிம்பில் உள்ளது. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

India supasses nw zealand with most wins in CWC 2023

ஒருநாள் உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றிகரமான அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்தை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், இந்தியா தற்போது 59 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் 100 ஆட்டங்களில் 73 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 58 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. அந்த அணிகளுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 89 போட்டிகளில் 49 வெற்றிகளுடனும், பாகிஸ்தான் 85 போட்டிகளில் 47 வெற்றிகளுடனும் உள்ளன.