
ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி
செய்தி முன்னோட்டம்
இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணம் (பிஜிடிஐ) சார்பில் இந்தியா சிமெண்ட்ஸ் ப்ரோ சாம்பியன்ஷிப் 2023, ஆகஸ்ட் 16 முதல் 19 வரை தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் காஸ்மோ கோல்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் டைட்டில் ஸ்பான்சரான இந்தியா சிமெண்ட்ஸ், சென்னையில் உள்ள கோல்ஃப் மைதானங்களை மேம்படுத்துவதற்கும் கோல்ஃப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
சென்னைக்கு மீண்டும் கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் திரும்புவதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
free entry for visitors to see match
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்
பிஜிடிஐ தலைமை செயல் அதிகாரி உத்தம் சிங் முண்டி, ப்ரோ சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மைக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த போட்டியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமால் ஹொசைன் மற்றும் பாதல் ஹொசைன், இலங்கையை சேர்ந்த என் தங்கராசா மற்றும் மிதுன் பெரேரா, ஜப்பானின் மகோடோ இவாசாகி மற்றும் நேபாளத்தின் சுக்ரா பகதூர் ராய் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் சி அருள், சந்தீப்சயல் மற்றும் எஸ் பிரசாந்த் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
மேலும் போட்டியை பார்க்க நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது என்பதால், பார்வையாளர்கள் போட்டியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.