Page Loader
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2023
07:32 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை கடும் தண்டனை விதித்துள்ளது. ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக அடுத்த இரண்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவர் தடை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி நடத்தை விதி 2.8ஐ மீறியதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹர்மன்ப்ரீத் கவுர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் விசாரணை எதுவுமின்றி அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கஉள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் இரண்டு போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கவுரால் பங்கேற்க முடியாது.

ட்விட்டர் அஞ்சல்

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடை விதித்தது ஐசிசி