
ஹாக்கி 5 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதத் தயாராகும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஓமனின் சலாலாவில் சனிக்கிழமை (செப்டம்பர் நடைபெற்ற எப்ஐஎச் ஆடவர் ஹாக்கி 5 ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.
முன்னதாக, முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் 7-3 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி, 10-4 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
முன்னதாக, லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 5-4 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், 2024 ஜனவரியில் நடக்கும் எப்ஐஎச் ஹாக்கி 5 உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
எப்ஐஎச் ஹாக்கி 5 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இந்தியா
India storm their way into the final of Men's Hockey5s Asia Cup 2023 where they will face acrh rivals Pakistan.#HockeyIndia #IndiaKaGame #Hockey5s pic.twitter.com/OiErdbjmbf
— Hockey India (@TheHockeyIndia) September 2, 2023