NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!
    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்

    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 30, 2023
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஐசிசி மகளிர் U-19 டி20 முதல் உலகக் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) இந்திய அணி வென்றது.

    இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்த இந்தியா, இங்கிலாந்தை வெறும் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

    இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டாலும், டைட்டாஸ் சாது 4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து தரப்பில் மிடில் ஆர்டர் வீரர் ரியானா மெக்டொனால்ட் கே (19) அதிக ரன் எடுத்தார்.

    பின்னர், சௌமியா திவாரி (24*) மற்றும் கோங்காடி த்ரிஷா (24) ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.

    மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை

    ஐசிசி போட்டிகளில் இந்திய மகளிருக்கான முதல் கோப்பை

    U-19 டி20 உலகக் கோப்பையின் முதல் சீசனான இதில், இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

    ஐசிசி நடத்தி வரும் எந்த ஒரு மகளிர் அணிக்கான தொடர்களிலும், இந்தியா பெறும் முதல் கோப்பை இதுவாகும்.

    மேலும், ஒருநாள், டி20 என எந்த ஒரு கிரிக்கெட் வடிவத்திலும், ஐசிசி உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய மகளிர் அணி என்ற பெருமையையும், இதன் மூலம் இந்தியா பெற்றுள்ளது.

    இதற்கிடையே, U-19 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சீசனில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்வேதா செஹ்ராவத் திகழ்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெண்கள் கிரிக்கெட்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பெண்கள் கிரிக்கெட்

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்! ஐபிஎல்
    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! இந்திய அணி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025