
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.
13 வது கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள், இந்தியாவில் நாளை (அக்டோபர்-5ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, வரும் எட்டாம் தேதி,(அக்டோபர்-8) சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க இருநாட்டு வீரர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை வந்தடைந்த இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள்
#WATCH | Tamil Nadu: Players of Indian and Australian Men's Cricket team for World Cup 2023 arrive at Chennai Airport
— ANI (@ANI) October 4, 2023
India will face Australia on 8th October at MA Chidambaram Stadium in Chennai. pic.twitter.com/eOl80lKpRu