இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : 31 ஆண்டு சோகத்திற்கு முடிவு காட்டுவாரா ரோஹித் ஷர்மா?
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.26) தொடங்க உள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான இந்த போட்டிக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் இந்தியா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1-1 என சமன் செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
இதன்மூலம், தென்னாப்பிரிக்காவில் விராட் கோலிக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்ற ஒரே இந்திய இந்திய கேப்டன் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
இந்நிலையில், அடுத்து தொடங்க உள்ள டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைப்பார்.
India vs South Africa Test Series Will Rohit Sharma end 31 year wait
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடர்கள்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டில் இந்தியா இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது.
தென்னாப்பிரிக்கா மீதான தடை விலக்கப்பட்ட பிறகு, 1992இல் முகமது அசாருதீன் தலைமையில் முதல்முறையாக பங்கேற்றது.
அதன் பிறகு 1996இல் சச்சின் டெண்டுல்கர், 2001இல் சவுரவ் கங்குலி மற்றும் 2006-07 தலைமையில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா விளையாடியது.
தொடர்ந்து, 2010-11 மற்றும் 2013-14இல் எம்எஸ் தோனி, 2018-19 மற்றும் 2021-22இல் விராட் கோலி தலைமையில் தலா 2 போட்டிகளில் விளையாடி சில போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தொடரைக் கைப்பற்றவில்லை.
இந்நிலையில், 31 ஆண்டுகால இந்த சோதனைக்கு ரோஹித் ஷர்மா முடிவுரை எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.