ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசி டி20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மார்ச் 29 அன்று ஐசிசி வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தானின் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் இப்போது முதல் 10 இடங்களுக்குள் (டி20 தரவரிசையில்) மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் கேப்டன்
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தாலும், தொடரில் பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய ரஷித், பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடருக்கு முன்பு, ஆப்கானிஸ்தான் எந்த ஒரு சர்வதேச ஆட்டத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதில்லை. இரு அணிகளும் இதற்கு முன் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே டி20 பந்துவீச்சாளர்களில் ரஷித் முதலிடத்தைப் பெறுவது இது முதல் முறையல்ல. 2018லும் அவர் முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.