ஐசிசி 2024க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு; இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது.
இதில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. 2024ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இலங்கைக்கு எதிராக நடந்த இந்த மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்தது.
இதற்கு மாறாக, நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் இந்த மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் முக்கிய இடங்களை வகிக்க, இலங்கை மத்திய வரிசையில் ஆதிக்கம் செலுத்தியது.
வெஸ்ட் இண்டீஸின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் ஆல்ரவுண்ட் திறன்களுக்காக சேர்க்கப்பட்டனர்.
பந்துவீச்சு வரிசையில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ஏஎம் கசன்ஃபர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியை நிறைவு செய்தனர்.
வீரர்கள் பட்டியல்
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி வீரர்களின் பட்டியல்
வீரர்களின் பட்டியல்: சைம் அயூப், ரஹ்மானுல்லா குர்பாஸ், பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அஸ்மத்துல்லா ஓமர்சாய், வனிந்து ஹசரங்கா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஏஎம் கசன்ஃபர்.